உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருப்பணிக்கு முதல்வர் ரூ.19 லட்சம் நிதி

கோவில் திருப்பணிக்கு முதல்வர் ரூ.19 லட்சம் நிதி

புதுச்சேரி: அரும்பார்த்தபுரம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்கு, ரூ.19 லட்சம் நிதிக்கான காசோலையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

உழவர்கரை தொகுதி, அரும்பார்த்தபுரம் திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிக்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் ரங்கசாமி, ரூ.19 லட்சத்திற்கான காசோலையை, உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி முன்னிலையில், கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது, ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !