உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டீ ஹோமம்

மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் மகா சண்டீ ஹோமம்

புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், மகா சண்டீ ஹோமம், 108 சவாசினி பூஜை வரும் 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நாளை (31ம் தேதி) காலை மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா லட்சுமி ஹோமம், மாலை 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம் சப்தசதீ பாராயணம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 1ம் தேதி கோ பூஜை, அஸ்வ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்களி பூஜை, கன்யா ப்ரம்மசாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டீ ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை கமிட்டி உறுப்பினர்கள் நாகராஜ சுவாமிகள், சீதாராம அய்யர், வச்சலா சிதம்பரகுருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !