உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்: தெய்வீக ஒளியில் மிளிரும் ராம ஜென்மபூமி!

தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்: தெய்வீக ஒளியில் மிளிரும் ராம ஜென்மபூமி!

அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பக்தர்களின் உள்ளங்களைப் பரவசப்படுத்தும் வகையில், பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோவில் நவீன மின் விளக்குகளால் ஒளிர்கிறது. கோவில் முழுவதும் பரவியுள்ள தெய்வீக ஒளி, தீபாவளிப் பண்டிகையின் ஆன்மிகச் சிறப்பை மேலும் மெருகூட்டுகிறது. இந்தப் புனிதமான தருணத்தில், பக்தர்களும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி ஸ்ரீ ராமரை வழிபட்டு, பக்தி ஒளியைப் பரப்புமாறு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !