உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜராத்தில் நர்மதை ஆரத்தி; இன்று மாலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

குஜராத்தில் நர்மதை ஆரத்தி; இன்று மாலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.


ஷூல்பனேஷ்வர் நர்மதை படித்துறையில் நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு நர்மதை அன்னைக்கு ஆரத்தி எடுத்து வழிபட உள்ளார்.  ஷூல்பனேஷ்வர் நர்மதை படித்துறை, சிலை ஆஃப் யூனிட்டி பகுதி மேம்பாடு மற்றும் சுற்றுலா நிர்வாக ஆணையத்தின் சார்பில் ரூ.15.10 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !