உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியார் மடம், செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சைவ சமய குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் பன்னிரு சைவத்திருமுறைகளில் 8ம் திருமுறையாக உள்ள திருவாசகத்தின் 52 பதிகங்கள் மற்றும் அதிலுள்ள முழு பாடல்களையும் படித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வழிபாடுகள் திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருக்கூட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமையில் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !