உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருங்கொன்றை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பெருங்கொன்றை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சாலவாக்கம்: காட்டுப்புத்துாரில் பெருங்கொன்றை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது.


சாலவாக்கம் அடுத்த காட்டுப்புத்துார் கிராமத்தில், பெருங்கொன்றை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு கணபதி பூஜை, லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்றன. இதை தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு அம்மன் பிரதிஷ்டை, யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசதனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !