உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி செவ்வாய்: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஐப்பசி செவ்வாய்: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்காமுத்தூர் பை பாஸ் ரோடு சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள முருக பெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !