உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் பச்சைவாழியம்மன் கோவிலில் கோ சாலை எம்.எல்.ஏ., திறப்பு

பாகூர் பச்சைவாழியம்மன் கோவிலில் கோ சாலை எம்.எல்.ஏ., திறப்பு

பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.


புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவிலில் மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பசுக்களை பராமறிக்கும் வகையில், குளக்கரை பகுதியில் புதியதாக, மின் விசிறி, கண்காணிப்பு கேமரா, 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கோ சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கோ சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, குளக்கரை பகுதியில் மரம் நடும் நிகழ்ச்சியில், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலைய துறை கண்காணிப்பாளர் தயாபுரி பங்கேற்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !