தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட தேர்களை ஓடவிட்டு கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் தேர் பட்டறை சாதனை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் மேற்பட்ட புதிய தேர்களை வடிவமைத்து ஓடவிட்டு, சாதனை படைத்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய தேர்களை வடிவமைக்கும் பணிகளில் ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை, சிறப்பான பணிகளை செய்து வருகிறது. கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை இயங்கி வருகிறது. புதிய தேர் வடிவமைப்பு மற்றும் பழங்கால தேர்களை வடிவம் மாறாமல் புதிய தொழில் நுட்பத்துடன் புதிப்பத்தல் உள்ளிட்ட பணிகளை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தலைமுறைகளைக் கடந்து இயங்கி வரும் இந்த தேர் பட்டறையில் நான்கரை அடி அகலம், 21 அடி உயரம், பனிரெண்டரை அடி அகலம், 37 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட தேர்கள் கூட இலுப்பை மரங்களால் ஆன அழகிய சுவாமி சிலைகள் வேலைப்பாடுகளுடன் ஆட்டோமேட்டிக் பிரேக், இரும்பு அச்சுகளுடன் கூடிய சக்கரங்கள் பொருத்தி 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கக்கூடிய அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய தேர்கள் இங்கு செய்யப்படுகின்றன.
ஐந்து அடி முதல் 15 அடி அகலம் வரையிலான இரும்புச்சக்கரங்கள் கொண்டு, தேர்களின் அளவுக்கு ஏற்றாற்போல நவீன பிரேக் வசதியுடன் அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய தேர்கள் இங்கு தயார் செய்யப்படுகிறது. அதேபோல் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்த தேர்களையும், அதன் வடிவம் மாறாமல் புதிய தொழில்நுட்பத்தில் தயார் செய்யும் பணியும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. புதிய தேர் வாங்கினாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை தேர் வடிவமைப்பு வல்லுநர் பிரகாஷ், 45; தனது தந்தை காலத்திலிருந்து செய்து வருகிறார். குறைந்த செலவில் தேர் செய்வதில் இவர்கள் கடந்த இரண்டு தலைமுறைகளாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். தேர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த தேரினை அவர்களின் சொந்த ஊருக்கு நேரில் எடுத்துச் சென்று கொடுப்பதுடன், அந்த தேரினை அங்கு தேரோடும் வீதிகள் வழியாக சோதனை ஓட்டமும் செய்து காண்பிக்கின்றனர். அத்துடன் தேர்களை அந்தந்த பகுதிகளுக்கேச் சென்று தயாரித்துக் கொடுக்கும் வசதியும் இவர்களிடம் உள்ளது.
இதுகுறித்து மேலும் விபரங்கள் அறிய 99761 62384 என்ற மொபைல் எண்ணில் தேர் வடிவமைப்பாளர் பிரகாஷை தொடர்பு கொள்ளலாம்.