உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் ஐப்பசி பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரியகோவிலில் ஐப்பசி பிரதோஷ வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஐப்பசி பிரதோஷமான இன்று சிவ பெருமானை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரியகோவிலில் இன்று நடந்த பிரதோஷ விழாவில், நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி, தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, பெருவுடையார், பெரியநாயகி, வராஹி உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !