ஆன்மிக கண்காட்சி மாணவர்களுக்கு அழைப்பு!
சென்னை: ஆன்மிகம் தொடர்பான தகவல்களை அறிய, இந்து ஆன்மிக அமைப்புகளின் சார்பில், கண்காட்சி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பும் விதமாக, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை அறக்கட்டளை, ஐ.எம்.சி.டி., அறக்கட்டளை இணைந்து, கடந்த, 4ம் தேதியில் இருந்து, பள்ளிகளில் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த யாத்திரை வரும், 15ம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும், மெரீனா கடற்கரையில், விவேகானந்தரின் பொன்மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க, மாணவர்கள் நடை பயணம் மேற்கொள்ள உள்ளனர். ரத யாத்திரையின் இறுதியாக, 200க்கும் அதிகமான இந்து ஆன்மிக அமைப்புகள் பங்கேற்கும், இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில், வரும், 19ம் தேதி நடக்கிறது. 24ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கு, தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கண்காட்சியின் இறுதியில், ஆன்மிக சொற் பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.