உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலுக்கு அதிவேக வின்ச்: சுவிட்சர்லாந்தில் தயாரிக்க முடிவு!

பழநி கோயிலுக்கு அதிவேக வின்ச்: சுவிட்சர்லாந்தில் தயாரிக்க முடிவு!

பழநி: பழநிகோயிலை 80 நொடிகளில் சென்றடையும் வகையில், அதிவேக "வின்ச் இயக்க, அரசு முடிவு செய்துள்ளது. பழநி மலைக்கோயில் 3 வது வின்ச் பழுது காரணமாக, கடந்த 3 மாதங்களாக இயக்கப்படவில்லை. "வின்ச் ஸ்டேஷன் மேல் தளத்தில் உள்ள "கியர் பாக்ஸ் மற்றும் பாகங்களை அகற்றிவிட்டு, ஐதராபாத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய பாகங்கள் பொருத்தப்பட்டன. தற்போது, பழைய "வின்ச் பெட்டி, இருக்கைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்கு "வின்ச் கொண்டுவரப்பட்டது.இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,""7 லட்ச ரூபாய் செலவில் 3வது "வின்ச்சில் பராமரிப்பு பணிகள் நடந்து முடிந்து, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. "வின்ச் தொழில்நுட்பங்கள், பெட்டிகள், நவீன மயமாக்கப்பட உள்ளது. இதன் மாதிரிகள் சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு வடிவமைக்கப்பட உள்ளது. தற்போது,"வின்ச் மூலம் 8 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்கிறோம். புதிய வடிவமைப்பு நவீன "வின்ச்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, 80 நொடிகளில் மலைக்கோயிலுக்கு செல்ல முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !