நத்தம் மாரியம்மன் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :4627 days ago
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகத்துடனும், அலங்கார தீபராதனையுடன் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடி மரத்திற்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டும், பட்டு உடுத்தியும் மஞ்சள் நிறத்தில் கூடிய மயில்வாகனத்தில் அம்மன் அமர்ந்தபடி கொடியேற்றப்பட்டது.ஏற்பாட்டை நிர்வாக அலுவலர் செல்வி மற்றும் தக்கார் அறிவழகன், பரம்பரை கோயில் பூசாரிகள் சொக்கையா, சின்னராசு, சுப்புராசு, நடராசு ஆகியோர் செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு பகர்தர்கள் கரந்தன்மலை கன்னிமார் தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக காப்புக்கட்டுதல் நடக்கிறது.