கடலுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கொடியேற்றம்
கடலுார்: கடலுார் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி மூலவர் சிவசுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை 7:00 மணிக்கு, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு வீதியுலா, பகல் 12:30 மணிக்கு வீரபாகு சிறை மீட்டல், தாரகன் வதம், இரவு 7:00 மணிக்கு சக்திவேல் பெறும் விழா நடக்கிறது. 15ம் தேதி காலை 7:00 மணிக்கு வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிேஷகம், 7:30 மணிக்கு சஷ்டி மகாபிேஷகம், இரவு 7:00 மணிக்கு வீரபாகு துாது சிங்கமுகன் வதம், 9:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கம், 17ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது.