உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

காளாத்தீஸ்வரர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி: திரளாக பக்தர்கள் பங்கேற்பு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பரிகார ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நேற்று மாலை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்


இக் கோயில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு ராகு, சிம்ஹிகை தேவியுடனும், கேது பகவான் சித்ரலேகாவுடனும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ஹோமங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்துறு மாலை 5:14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சியானார்கள். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ராகு பகவான் - சிம்ஹிகை தேவிக்கும், கேது பகவான் - சித்ரலேகா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ராகு பகவான் பச்சைப்பட்டிலும், கேது பகவான் மஞ்சள் பட்டிலும், மணக் கோலத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


இந்த பெயர்ச்சியினால் பரிகாரம் செய்ய வேண்டிய ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பூஜையில் பங்கேற்றனர். பயன் பெறும் மேஷம், சிம்மம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந் நிகழ்ச்சியை கம்பம் ஜெயபாண்டியன், கலைவாணி குடும்பத்தினர் உபயதாரர்களாக இருந்து செய்தனர். சிவாச்சாரியார்கள் மணிவாசகம், அர்ச்சகர் முத்துப் பாண்டி, முத்து ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !