உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா: நாளை காலை 11:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா: நாளை காலை 11:00 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் 6ம் நாளான நாளை (நவ.,15) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 11:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோயிலில் நாளை (நவ., 15) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு விளாபூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் சன்னதி அடைக்கப்படும். கோயிலில் இருந்து சின்னக்குமார சுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி அடிவாரம் கிரி வீதியில் எழுந்தருள்வர். மாலை 6.00 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் சுவாமி கோயிலுக்கு வந்ததும் வழக்கம்போல் பூஜைகள், இராக்கால பூஜை நடக்கும். சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி நாளை (நவ.,15) காலை 11:30 மணிக்கு தரிசனம் உட்பட அனைத்து கட்டண சீட்டுகளும் வழங்குவது நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் கோயிலுக்கு செல்ல காலை 11:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு தங்கரதம் புறப்பாடு நடக்காது. நவ.,16ல் முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கும், பெரியநாயகி அம்மன் கோயில் வெளி பிரகாரத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்க உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !