/
கோயில்கள் செய்திகள் / கொங்கனகிரி கந்த பெருமான் கோவில் சூரசம்ஹார விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கொங்கனகிரி கந்த பெருமான் கோவில் சூரசம்ஹார விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1 minutes ago
அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கனகிரியில் புகழ் பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேய ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில், 17 ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக, 5:00 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேய ஸ்ரீ கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம் மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை16 ம் தேதி காலை 6:30 மணிக்கு கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை தொடர்ந்து 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் திருகல்யாண நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.