ஹரே கிருஷ்ணா கோயிலில் கோவர்த்த மலை பூஜை
ADDED :14 minutes ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வசந்தநகரில் உள்ள ஹரே கிருஷ்ண கோயிலில் கோவர்த்த மலை பூஜை நடந்தது. இக்கோயிலில் அக்.,24 முதல் நவ.,23 வரை தீபோற்ஸவம் விழா தினமும் நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக கிருஷ்ணர் லீலையில் நான் தான் கோவர்த்தன கிரி எனக்கூறி ஆபத்தில் மக்களை காப்பாற்றினார். அன்னத்தினால் செய்யப்பட்ட கோவர்த்தன மலையை சுற்றி வந்து தீபம் ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.