உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியர் திருக்கல்யாணத்தில் ஒரு தேங்காய் ரூ. 2.55 லட்சத்திற்கு ஏலம்

சுப்பிரமணியர் திருக்கல்யாணத்தில் ஒரு தேங்காய் ரூ. 2.55 லட்சத்திற்கு ஏலம்

போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் நடந்த திருகல்யாணத்தில் ஒரு தேங்காய் ரூ.2.55 லட்சத்திற்கு ஏலம் போனது.


கந்த சஷ்டி விழாவை ஒட்டி தேவசேனா சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் இன்று நடந்தது. கந்த சஷ்டி ஏழாம் நாளான இன்று முருகனுக்கு விக்னேஸ் வர பூஜை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய பூஜையுடன் வள்ளி, தெய்வானையுடன் தேவசேனா சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் முத்து ராஜன், செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் ஒரு தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த விழா வில் அபிஷேகத்திற்கு வந்த ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் போடியை சேர்ந்த குண சேகரன் என்பவருக்கும், மதுரை அருகே செல்லம்பட்டியை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. குணசேகரன் ரூ. 2 லட்சத்தி 45 ஆயிரம் வரை ஏலம் கேட்டார். ரேணுகா ரூ.2 லட்ச த்தி 55 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ.2 லட்ச த்திற்கு ஏலம் போனது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !