உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி திருக்கல்யாணம்

கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி திருக்கல்யாணம்

பொங்கலூர்: பொங்கலூர் குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் எட்டாம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை மகா கணபதி யாகத்துடன் துவங்கியது. அன்று பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவங்கினர். தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சஷ்டி அபிஷேக பூஜை, தீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை சூரசம்காரம், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை காலை, 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, திருக்கல்யாணம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின் திருக்கல்யாண விருந்து, அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !