அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :26 minutes ago
பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த நவ. 10 ல் கந்தர் சஷ்டி விழா மகா கணபதி யாக வழிபாட்டுடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு அணிந்து விரதம் துவக்கினர். தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, திரவியாஹு தி, பூர்ணாஹூதி, சண்முக கவசம் பாராயணம், கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. நேற்று சூரசம்ஹாரம், சம்ஹாரமூர்த்திக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்தனர். இன்று காலை வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் சுவாமிக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் திருக்கல்யாண விருந்து, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா கோஷம் எழுப்பி திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.