உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு மலர் அலங்காரம்

காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு மலர் அலங்காரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று மஹா அபிஷேகமும், சிறப்பு மலர் அலங்காரமும் நடந்தது.


அய்யப்ப சுவாமிக்கு உகந்த கார்த்திகை மாத பிறப்பையொட்டி, காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று மஹா அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜையும், கலச பூஜையும் நடந்தது. தொடர்ந்து அய்யப்ப சுவாமிக்கு, நெய், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தத்தால் மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு அய்யப்பன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அய்யப்பன் சஹஸ்ரநாமம், பஜனை, படிபஜையும், இரவு 8:30 மணிக்கு ஜோதி தரிசனமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !