தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் குருபூஜை விழா
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 1971ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 48 ஆண்டுகள் ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்தார். உலெகெங்கும் சமயம் வளரவும், சமூகம் மலரவும், வேதஆகம புராண இதிகாச திமுறை சாத்திரம் தழைக்கவும், சைவமும், தமிழும் மழைத்தினிதோங்கவும் திரப்பணிகள் நிகழவும் அறப்பணியும் செய்தருளினார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பரிபூரணம் அடைந்தார். அவரது திருமேனி ஆனந்தபரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவரின் வழித்தோன்றலான தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் முயற்சியில் கருக்கல் திருப்பணியில் குருமூர்த்தம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி இன்று 7ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கூட்டத்து அடியவர்கள் படைசூழ எழுந்தருளி குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பத்மஸ்ரீ திருத்தணி சாமிநாதன் ஒதுவாருக்கு பத்தாயிரம் பொற்கிழிவி வழங்கி கவுரவித்தார். மதியம் மகேஸ்வரபூஜை நடந்தது. குரு பூஜையையொட்டி கருத்தரங்கம், திருமுறை விண்ணப்பம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. இதில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 26வது குருமகா சந்நிதானத்தின் நூற்றாண்டு விழாவை நிறைவையொட்டி குருமூர்த்தில் மாலை 6 மணியளவில் 100 இசைகலைஞர்கள் இணைந்து வழங்கிய சங்கீத சமர்ப்பணம் இசைநிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடந்தது.