உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத் விழா மூன்றாம் நாள்: தங்க பூத வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை தீபத் விழா மூன்றாம் நாள்: தங்க பூத வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாள் காலை உற்சவத்தில், தங்க பூத வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்)  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி,  மாட வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தங்க கொடிமரம் அருகே வைக்கப்பட்டுள்ள வெள்ளி பிரார்த்தனை உண்டியலில் சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில்  மோப்பநாய் தென்றலுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.  திருவிழா பத்தாம் நாளான வரும் 24ம் தேதி,  2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !