உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் , வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கடந்த 10ம் தேதி கொடியேற்றம், நவவீரர்கள் காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் உற்சவர் சுப்ரமணிய சுவாமி வீதியுலாவும், கடந்த 13ம் தேதி பச்சை போடுதல், 14ம் தேதி கம்பம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 15ம் தேதி சூரசம்ஹார விழாவும் விமர்சையாக நடந்தது. தொடர்ந்து, நேற்று மாலை பால்குடம் எடுத்தல், சாந்தாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் செய்தனர். விழாவின் கடைசி நாளான நேற்று இடும்பன் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !