உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சேவூர்: சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


அவிநாசி வடுத்த சேவூரில் எழுந்தருளியுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம்,விஸ்வக்சேனர் பூஜை,மஹாசங்கல்பம், சுதர்சன ஹோமம், வேதபராயணம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு மங்கல ஸ்நானம்,சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க அரசமரத்து விநாயகர் கோவிலில் இருந்து இனிப்புகள், பழவகைகள் அடங்கிய சீர்வரிசை தட்டுகள் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் திருக்கல்யாண உற்சவ வைபவம்,மகாபூர்ணாகுதி, திருமாங்கல்ய தாரணம், மகாதீபாரதனைகள் நடைபெற்றது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !