உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

சோளீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

திருவாலங்காடு: ஆற்காடுகுப்பம் சோளீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடுகுப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் உள்ள, 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த குளத்தில், குபேரன் வழிபட்டதாக ஐதீகம். இக்கோவில் குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்ததாகவும், அறநிலையத்துறை அதிகாரிகள் அவற்றை இதுவரை சீரமைக்கவில்லை எனவும், பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பி செல்வதாக, வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சோளீஸ்வரர் கோவில் குளத்தை விரைந்து சீரமைக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !