திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு; பாதுகாப்பு வளையத்தில் முருகப்பெருமானின் முதல்படை வீடு
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ., 24) கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஹிந்து மக்களிடையே பெரிதும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மறு சீராய்வு மனு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு எந்த முறையீடும் செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 16 முகாம்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில் 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய, முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் அதிநவீன கேமராக்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆலோசனை: தீபத்துாணில் நவ.,24 அன்று ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றும்படி, உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் இருவரும் இன்று பணியில் இல்லை. நாளை நவ.,24 நீதிமன்றம் விடுமுறை. இதனால் நாளை கட்டாயம் தீபத்துாணில் தீபம் ஏற்றியே தீர வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்வகேட் ஜெனரலுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.