மாகாளியம்மன் கோவில் திருவிழா
ADDED :4619 days ago
சூலூர்: சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு 29ம்தேதி சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. 5ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 10.00 மணிக்கு நொய்யல் ஆற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி வானவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் புறப்பட்டது. சூலூர் சிவன் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக கோவிலை மீண்டும் அடைந்தது. தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இன்று மாலை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 19ம்தேதி மகாமுனி பூஜையுடன் விழா நிறைவடைகிறது.