மேல்மலையனூர் கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி துவக்கம்!
ADDED :4613 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி திருத்தேர் விழாவிற்கு புதிய தேர் அமைக்கும் பணி துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா அடுத்த மாதம் 10ம் தேதி மகா சிவராத்திரி அன்று துவங்குகிறது. மறுநாள் 11ம் தேதி மயானக்கொள்ளையும், 14ம் தேதி தீ மிதித்தல் விழாவும், 16ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. மேல்மலையனூர் கோவிலில் தேர் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் ஆகியவை நிலையானவையாக செய்து வைத்துள்ளனர். மற்ற பாகங்களை கோவிலின் ஐதீகப்படி ஒவ்வொரு ஆண்டும் பசுமையான மரங்களை கொண்டு புதிதாக தேர் செய்து விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர் அமைக்கும் பணி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் நேற்று நடந்தது.