பாப்பாக்குடி மூன்றீஸ்வரர் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்
ADDED :4616 days ago
திருநெல்வேலி: பாப்பாக்குடி சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா இன்று (16ம் தேதி) துவங்குகிறது. கோயிலில் இன்று காலை 6 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. பகல் 12 மணிக்கு கும்ப அபிஷேகம், இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. 11 நாட்கள் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடக்கிறது. 9ம் திருநாள் 24ம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல், தேரோட்டம் நடக்கிறது. 10ம் திருநாள் பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை ஆய்வாளர்கள் கணேஷ் வைத்திலிங்கம், வள்ளியம்மாள், நிர்வாகி நடராஜன், மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.