மெகா பிள்ளையார்!
ADDED :5004 days ago
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி சந்நிதியின் இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி வீற்றிருப்பவர் முக்குறுணி விநாயகர். 8 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் இவர் நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். திருமலைநாயக்கர் காலத்தில் வண்டியூர் மாரியம்மன் கோயில் அருகில் தெப்பக்குளத்திற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்தவர். இந்த சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தவர் கந்தப்பொடி பெத்துசெட்டி. விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி அரிசியால் (12 படி, உத்தேசமாக 18 கிலோ) செய்யப்பட்ட ஒரே கொழுக்கட்டையை நைவேத்யம் செய்வர்.