கோட்டை மாரியம்மன் கோயிலில் உடை மாற்றும் வசதி:பக்தைகள் எதிர்பார்ப்பு!
ADDED :4670 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு உடைமாற்றும் வசதி செய்து தர வேண்டும்.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் அங்கபிரதட்ணம், கொடிக்கம்பத்திற்கு நீருற்ற வருகின்றனர். இவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள குழாய்களில் குளித்தபின் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேறு உடை மாற்ற வசதியில்லாததால் ஈரத்துணியுடன் வீட்டிற்கு செல்லும் நிலைஉள்ளது. கோயில் வளாகத்தில் உடைமாற்றும் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முகமுத்தரசப்பன் கூறுகையில்,"பக்தைகள் உடை மாற்றும் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பிப். 26 வரை கோயில் நடை காலை 4 மணி முதல்இரவு 11மணி வரை திறந்திருக்கும் ,என்றார்.