பாலசவுந்தரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4695 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 2014ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இக்கோயிலின் துணை கோயிலான கெந்தமான பர்வதம் செல்லும் பாதையில் உள்ள, பாலசவுந்தரி அம்மன் கோயிலில், திருப்பணிகள் முடிவடைந்து, பிப்.,18ம் தேதி, முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7.20 மணிக்கு, வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் ராதா, குலதெய்வ வழிப்பாட்டுகாரர்கள் ராமநாதன், முருகன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.