உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொடையூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மொடையூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

செஞ்சி: மொடையூர் ஜெயநாதேஸ்வரர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. செஞ்சி தாலுகா மொடையூர் கிராமத்தில் உள்ள ஞானசவுந்தரி சமேத ஜெயநாத ஈஸ்வரர், விநாயகர், சுப்ரமணியர், ஞானதுர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு நாளை (22ம் தேதி) மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச ஸ்தாபிதம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை 9 மணிக்கு கோபூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 6 மணிக்கு தம்பதி பூஜை, கன்னிகா பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு விஸ்வரூப தரிசனம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாஹுதியும், 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடும், பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு ஞானசவுந்தரி சமேத ஜெயநாதேஸ்வர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகா அபிஷேகமும் செய்ய உள்ளனர்.  இரவு சாமி வீதி உலாவும், வாணவேடிக்கையும் நடக்க உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !