தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் 25ம் தேதி மாசிமகப் பெருவிழா
ADDED :4641 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் வரும் 25ம் தேதி மாசி மகப்பெருவிழா நடக்கிறது. திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாள் விழாவில் முத்துச்சிவிகையில் திருஞானசம்மந்தர் வீதியுலா நடந்தது. மூன்றாம் நாள் பூதவாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, நான்காம் நாள் நாக வாகனதிலும், ஐந்தாம் நாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா நடந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 24ம் தேதி மதியம் 2:00 மணிக்கு திருத்தேர் விழாவும், 25ம் தேதி மாசி மகப்பெருவிழாவும், தீர்த்தவாரியும் நடக்கிறது. 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மாசிமக பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.