உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சத்தீவு ஆலய விழா: 3,643 பேர் பங்கேற்பு!

கச்சத்தீவு ஆலய விழா: 3,643 பேர் பங்கேற்பு!

ராமேஸ்வரம்: "கச்சத்தீவு ஆலய விழாவிற்கு 3,643 பேர் செல்ல உள்ளனர் என, பயண குழு பொறுப்பாளர் சகாயராஜ் கூறினார். ராமேஸ்வரம் சூசையப்பர் ஆலய பாதிரியாரான இவர் கூறியதாவது: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவையொட்டி, பிப்.,23 ல் காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்காக 114 விசை, நாட்டுப்படகுகளில், 100 பாதிரியார், 84 கன்னியாஸ்திரிகள் மற்றும், 99 குழந்தைகள் உட்பட 3,459 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். பயணத்தை, 40 பேர் மேற்பார்வையிடுவர். உடல்நலத்திற்கான மருந்து, மாத்திரைகளை பக்தர்களே கொண்டு வர வேண்டும். உயிர்காப்பு சாதனத்தை(லைப் ஜாக்கெட்) மீன்துறை வழங்கும். இந்த விழாவை, அடுத்தாண்டு முதல் மதநல்லிணக்க விழாவாக, அரசே ஏற்று நடத்த வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !