உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி ராசி பலன் (14.3.13 முதல் 13.4.13 வரை)

பங்குனி ராசி பலன் (14.3.13 முதல் 13.4.13 வரை)

மேஷம்: உழைக்கும் மனப்பான்மை நிறைந்த மேஷராசி அன்பர்களே!

குடும்ப ஒற்றுமை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெற்ற சுக்கிரனுடன் மீனத்தில் உள்ளார். புதன், குரு, சுக்கிரன்  அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குவர். இளைய சகோதரர்கள் உழைப்பால் உயர்வர். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி திருப்தி தரும். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வ சொத்து உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் பேணுவதில் அக்கறை கொள்வீர்கள். எதிரியால் வரும் தொந்தரவை சமயோசிதமாக செயல்பட்டு சரிசெய்வீர்கள். தவிர்க்க முடியாத செலவுக்காக கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. தம்பதியர் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து குடும்ப ஒற்றுமையைப் பாதுகாத்திடுவர். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.  தொழிலதிபர்கள் உற்பத்தி பெருக்கத்திற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வர். பணவரவு ஓரளவுக்கு இருக்கும். வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அக்கறை காட்டுவர். ஓரளவு லாபம் உண்டு. பணியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆடை,ஆபரணம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமையாக வேலை செய்து நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையை உயர்த்த முயற்சிப்பர். ஓரளவு ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் நலத்திட்டங்களில் அக்கறையுடன் ஈடுபடுவர். ஆதரவாளர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டு. மாணவர்கள் விருப்பத்துடன் படித்து தேர்ச்சி இலக்கை அடைவர்.

பரிகாரம்: அபிராமியை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் கிடைக்கும்.

உஷார் நாள்: 30.3.13 இரவு 12.55 - 1.4.13 இரவு 3.24
வெற்றி நாள்: மார்ச் 19, 20, 21
நிறம்: மஞ்சள், ரோஸ்    எண்: 1, 2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !