உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: தைரியத்துடன் செயல்களை நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!

கும்பம்: தைரியத்துடன் செயல்களை நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே!

ஒழுங்கு நடவடிக்கை: இந்த மாதம் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உச்சபலம் பெற்றுள்ள சுக்கிரன், மூன்றாம் இடத்தில் உள்ள கேதுபகவான் தாராள நற்பலன்களை வழங்குகின்றனர். உறவினர்களின் பொறுப்பற்ற பேச்சு, செயலால் மனவருத்தம் கொள்வீர்கள். உங்களின் பேச்சு இனிமை தருவதாக இருப்பினும் கூட, தேவையற்ற இடங்களில் பேச வேண்டாம்.வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். தாயின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கருத்து வேறுபாடு கொண்டு விலகுவர். பூர்வ சொத்தில் பணவரவு இருந்தாலும், செலவும் ஏற்படும். உடல்நலம் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை வேண்டும். நீண்டகால கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். அதே நேரம், குடும்பத்தின் கூடுதல் செலவினங்களுக்காக புதிதாக கடன்பெறுவீர்கள்.தம்பதியர் அனுசரித்து நடந்து குடும்பநலன் சிறக்க தேவையான பணிபுரிவர். நண்பர்களிடம் உதவி பெறுவதும், உதவுவதுமான பலன் உண்டு. தொழிலதிபர்களுக்கு உற்பத்தி பாதிக்கும். புதிய ஒப்பந்தம் பெறுவதில் தகுந்த அக்கறையுடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகள் சந்தை போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்குவர். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து செயல்படுவதால் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சிரமம் வராமல் தவிர்க்கலாம்.குடும்பப் பெண்கள் கணவரின் அருமை, பெருமைஒளை தாய்வழி உறவினர்களிடம் சொல்லி மகிழ்வர். வீட்டுச்செலவுக்கு சிரமமாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவச்செலவு அதிகரிக்கும். அடிக்கடி லீவு போட வேண்டி வரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் சுமாரான இலக்கை அடைவர். வேலைப்பளு கூடும்.அரசியல்வாதிகள், தலைமை மற்றும் ஆதரவாளர்களிடம் நிதானமாக நடப்பதால் மட்டுமே சிரமம் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் திருப்திகர பணவரவு உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் கூடும்.

பரிகாரம்:  ஆஞ்சநேயரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மை கூடும்.

உஷார் நாள்: 26.3.13 மாலை 4.32 முதல் 28.3.13 இரவு 9.34 வரை
வெற்றி நாள்: மார்ச் 15, 16
நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 6, 7


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !