உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜபுரத்தில் தேர் திருவிழா

ராமானுஜபுரத்தில் தேர் திருவிழா

ஸ்ரீபெரும்புதூர்:ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோயிலில், மஹா சிவராத்திரி பிரம்மோற்சவம் முன்னிட்டு, தேர் திருவிழா நடந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தில், மணிகண்டீஸ்வரர் கோயிலில், கடந்த 1ம் தேதி, மஹா சிவராத்திரி பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும், சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், மாலை திருவிதி உலா நிகழ்ச்சி நடந்தன. விழாவில், 9ம் நாள் உற்சவமாக, மணிகண்டீஸ்வரர் உமையம்மை உடன் திருத்தேரில், எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருத்தேர் காலை 10:30 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வீதி உலா வந்தார். பொதுமக்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !