வீர ராகவர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம்
ADDED :4633 days ago
திருவள்ளூர்; வீர ராகவர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது.திருவள்ளூர் வீர ராகவர் கோயிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, ஏராளமான மக்கள், கோபுர வாசல் அருகே தங்கி காலையில் பெருமாளை தரிசித்து செல்வர். வைத்திய வீர ராகவரை வழிபட்டால், உடலில் உள்ள நோய்கள் நீங்கி, சுகமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாத அமாவாசையை ஒட்டி, மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம், அமாவாசையன்று நேற்றும், இரவு, 7:00 மணியளவில், கோயில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் தெப்பத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மூன்றாவது நாளுடன் தெப்ப உற்சவம் நிறைவடைகிறது.