மகா சிவராத்திரி விழா
ADDED :4634 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆறு கால பூஜை நடந்தது.அவலூர்பேட்டையில் அகத்தீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு காலை முதல் மறுநாள் அதிகாலை வரையிலான ஆறுகால பூஜை நடந்தது.இரவு கோயில் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் லதா பிரபுலிங்கம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சித்தகிரி முருகன் குழுவினர் பக்தி இன்னிசையும், 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை இறைபணி மன்றத்தினர் செய்திருந்தனர்.இதே போல் நொச்சலூர் திரிபுர சுந்தரி சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் மூன்று கால பூஜை நடந்தது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.