நாட்டியாஞ்சலி விழா
ADDED :4632 days ago
புதுச்சேரி:சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், புதுச்சேரி மாணவி பங்கேற்றார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பரதக் கலை மாணவிகள் நடனமாடி வருகின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில், புதுச்சேரி வழக்கறிஞர் சத்யநாராயணன் மகள் தாணியா கனக மகாலட்சுமி பங்கேற்றார். விழாவில், மாணவியின் தாயார் பானுமதிஸ்ரீ, ஆசிரியர் ஜெய்ஸ்ரீ நாராயணன், புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி., கிருஷ்ணியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.