பூரணாங்குப்பத்தில் 18ம் தேதி தேர் திருவிழா
ADDED :4632 days ago
கிருமாம்பாக்கம்:பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 18ம் தேதி நடக்கிறது. பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா 10ம் தேதி கரகம் வீதியுலா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. வரும் 17ம் தேதி இரவு 12 மணிக்கு ரனகளிப்பும், 18ம் தேதி தேர் திருவிழா மற்றும் மயானக்கொள்ளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பூராணாங்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.