10 ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலில் பிரதிஷ்டை!
ADDED :4592 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே 2 கி.மீ., தொலைவில், அர்ஜூணா நதிக்கரையில் அமைந்துள்ளது அழகிய மணவாளப்பெருமாள் கோயில்.10 ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் புதர்மண்டி கிடந்தது. புரட்டாசி சனி உட்பட பெருமாளுக்கு விஷேஷ தினங்களில் மட்டும் பக்தர்கள் சென்று வந்தனர். கோயிலை புனரமைக்க பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்தஆண்டு மத்திய அரசின் 13 வது நிதி ஆணையம், தமிழக அறநிலையத்துறை மூலமாக, கோயிலை புனரமைக்க 20 லட்சரூபாய் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. இதன் முக்கிய நிகச்சியான தூண்கள் பிரதிஷ்டைவிழா நடந்தது. இந்து சமய இணை ஆணையர் தனபால், முதல் துணை பிரதிஷ்டை செய்து துவக்கி வைத்தார்.