பூதபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா
ADDED :4643 days ago
ஸ்ரீபெரும்புதூர்: சவுந்தரவள்ளி சமேத பூதபுரீஸ்வரர் கோவிலில், இண்டாம் ஆண்டு, பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் சிவன் கோவில் தெருவில், சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்ததாகும். இது, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலை, திருஞான சம்பந்தர் அறக்கட்டளை மற்றும் பக்தர்களின் உதவியுடன் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் பங்குனி உத்திர பெருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, இரண்டாம் ஆண்டு, பங்குனி உத்திர பெருவிழா நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பூதபுரீஸ்வரர் உற்சவர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார்.