உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூ மிதி என்ற பெயரில் நெருப்புக்குழம்பில் நடக்கிறார்களே! எப்படி?

பூ மிதி என்ற பெயரில் நெருப்புக்குழம்பில் நடக்கிறார்களே! எப்படி?

அருள்நிலையாளர்கள், மருள் நிலையாளர்கள் என சுவாமி ஆடுபவர்களை இரண்டாகப் பிரிப்பார்கள். தியானத்தின் போது, தன்னையே மறந்து, நெருப்பைக் கொண்டு உடலில் சுட்டாலும் தன்னிலை தெரியாமல் இறைவனோடு ஒன்றிப் போகிறவர்கள் உண்டு. ராமகிருஷ்ணர், ரமணர் போன்ற மகான்களெல்லாம் இதற்கு உதாரணம். நம் காவல் தெய்வக்கோயில்களில் சுவாமி ஆடுபவர்கள், இவர்களில் பாதியாக மருள்நிலைக்கு போய் விடுகிறார்கள். இவர்களும் சுவாமியோடு ஒன்றினாலும் கூட, தன்னுணர்வு சிறிதளவு இருக்கும். இந்த நிலையில் பூ மிதிக்கும்போது, அவர்களுக்கு சூடு தெரிவதில்லை. தென்மாவட்டங்களில் சுவாமி ஆடுபவர்களுக்கு மருளாளிகள் என்று பெயர் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !