உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

காரைக்குடி: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில்,பங்குனி விழாவின் முக்கிய நாளான நேற்று,லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், பங்குனி விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை 8 மணிக்கு முத்தாலம்மன் கோயிலிலிருந்து, திருக்கோயில் காவடி, பால்குடம், அக்னிகாவடி, அக்னி சட்டி புறப்பாடாகி திருக்கோயில் வந்தது. பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்கள்,பெண்கள் என ஏராளமானோர் பூக்குழி இறங்கினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. மதுரை, மேலும், சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !