உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

பஞ்சமுக கணபதி கோவில் கும்பாபிஷேக விழா

முசிறி: முசிறி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீபஞ்சமுக கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவின் முதல்நாள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், அநுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்ரணம், அங்குரார்ப்பணம், ரக்கூõபந்தனம், முதல் கால பூஜை, பூர்ணஹுதி நடந்தது. இரண்டாம் நிகழ்ச்சியாக உபச்சார பூஜைகள், தீபாராதனை, கடஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. மூன்றாம் நாளான நிகழ்ச்சியாக நாடி சந்தானம், திரவ்ய ஹோமம், கடம் புறப்பாடும் நடந்தது. அதையொட்டி ஸ்ரீபஞ்சமுக கணபதி திருக்கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் முசிறி பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை மாணிக்கம் சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !