வடவெட்டி கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :4704 days ago
செஞ்சி: வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. மறுநாள் அமாவாசையன்று மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 16ம் தேதி மாலை தேரோட்டமும், 19ம் தேதி இரவு தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் அங்காளம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.